×

’சீதை இந்தியாவின் மகள்’ என்ற வசனத்திற்கு நேபாளம் எதிர்ப்பு.. மன்னிப்பு கோரியது ஆதிபுருஷ் படக்குழு .

டெல்லி: ராமாயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இதில் ராமனாக பிரபாஸ், ராவணனாக ஸையிப் அலிகான். சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 500 கோடி ரூபாய் செலவில் 3டி தொழிலுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவான ஆதிபுருஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் இடம்பெறுள்ள ‘சீதை இந்தியாவின் மகள்’ என்ற வசனம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் இந்த வசனத்தை நீக்க கோரி நேபாளத்தில் போராட்டம் நடைபெற்றது.

இதனிடையே நேபாளம் தலைநகர் காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா உட்பட பல நேபாள தலைவர்கள் கூறுகையில், “ஆதிபுருஷ் படத்தில் ‘ஜானகி (சீதை) இந்தியாவின் மகள்’ என இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க வேண்டும். நேபாளத்தில் மட்டுமல்ல இந்தியாவில் திரையிடப்படும் இடங்களிலும் அந்த வசனம் நீக்கப்பட வேண்டும். காரணம் ஜானகி தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள ஜானக்பூர் பகுதியில் பிறந்தவர் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கையாக இருக்கும் சூழலில் இப்படியொரு வசனம் இடம்பெற்றிருப்பதை ஏற்கமுடியாது.இந்த வசனத்தை நீக்கும் வரை படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம்,”என்று தெரிவித்தார்.இந்த நிலையில், சீதை இந்தியாவின் மகள் என்ற வசனத்தை நீக்கி படக்குழு மன்னிப்பு கோரியுள்ளது.

The post ’சீதை இந்தியாவின் மகள்’ என்ற வசனத்திற்கு நேபாளம் எதிர்ப்பு.. மன்னிப்பு கோரியது ஆதிபுருஷ் படக்குழு . appeared first on Dinakaran.

Tags : Nepal ,Delhi ,Om Rawat ,Prabhas ,Raman ,
× RELATED ஜூன் 9ம் தேதி 3வது முறையாக பிரதமராக...