×

காவாசாக்கி நிஞ்சா 300

காவாசாக்கி மோட்டார்ஸ் நிறுவனம், நிஞ்சா 300 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.3.43 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 296 சிசி டிஓஎச்சி, 8 வால்வு இன்ஜின் உள்ளது.

இது அதிகபட்சமாக 39 பிஎஸ் பவரையும், 26.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டூயல் சானல் ஏபிஎஸ், வெப்பத்தை சமநிலைப்படுத்தும் தொழில்நுட்பம், கிளட்சை எளிதாக மாற்றும் தொழில்நுட்பம், ஸ்லிப்பர் கிளட்ச் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

The post காவாசாக்கி நிஞ்சா 300 appeared first on Dinakaran.

Tags : Kawasaki ,Kawasaki Motors ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...