×

2030ம் ஆண்டுக்குள் 5 புதிய எஸ்யுவி கார்களை அறிமுகம் செய்ய ஹோண்டா கார்ஸ் நிறுவனம் திட்டம்..!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், 2030ம் ஆண்டுக்குள் 5 புதிய எஸ்யுவி கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் எலவேட் எலக்ட்ரிக் அறிவிப்பு நிகழ்ச்சியில்பேசிய ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவர் டகுயா சுமுரா இந்த தகவலை தெரிவித்தார். 5 கார்களில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட உள்ளதுதான் எலவேட் எனவும் அவர் கூறினார்.

எலவேட் கார் 1.5 லிட்டர் ஐ-விடெக் டிஓஎச்சி பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இது அதிகபட்சமாக 121 பிஎஸ் பவரையும், 145 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதன் அடிப்படையில் எலவேட் எலக்ட்ரிக் ஹைபிரிட் கார் அடுத்ததாக வெளிவரும் என கூறப்பட்டது. ஆனால், எலக்ட்ரிக் காராக 2026ம் ஆண்டில் இது அறிமுகம் செய்யப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.

The post 2030ம் ஆண்டுக்குள் 5 புதிய எஸ்யுவி கார்களை அறிமுகம் செய்ய ஹோண்டா கார்ஸ் நிறுவனம் திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Honda Cars Company ,2030 ,Honda Cars India ,Honda Company ,Dinakaran ,
× RELATED சென்னை கர்னாடிக் ரோட்டரி கிளப்...