×

ஆத்துப்பாக்கம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கடந்த 2018-19ம் ஆண்டு ரூ.8 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆனால் இந்த குடிநீரை ஒரு மாதம் மட்டுமே ஊராட்சி சார்பில் விநியோகம் செய்தனர். அதன்பிறகு குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஆள் இல்லை. எனவே குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மீண்டும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஆத்துப்பாக்கம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Athuppakkam village ,Oothukottai ,Athuppakkam ,Periyapalayam ,
× RELATED பெரியபாளையம் அருகே ஏரிக்கால்வாய்...