×

நீட் போட்டித் தேர்வில் ஃபிட்ஜி மெடிக்கல் மாணவர்கள் சாதனை

சென்னை: நீட் 2023 போட்டித் தேர்வில் ஃபிட்ஜி மெடிக்கல் மாணவர்களும் இந்தாண்டு குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளனர். ஃபிட்ஜியின் தனித்துவமான பயிற்சியின் மூலம் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகளில் மாணவர்களை வெற்றிபெற செய்வதன் வழியாக, மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. அதன்படி, நீட் தேர்வு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து சாதித்து வரும் ஃபிட்ஜி மெடிக்கல் இந்த ஆண்டு நீட் தேர்விலும் வெற்றி முத்திரையை பதித்துள்ளது. இந்தாண்டு நீட் தேர்வில் பங்கேற்ற ஃபிட்ஜி மாணவர்கள் 130 பேரில் 127 பேர் சிறந்த மதிப்பெண் எடுத்து தகுதி பெற்றுள்ளனர். இரண்டாண்டு ஜெனித் பயிற்சி வகுப்பு சேர்ந்த ஜேக்கப் பிவின் 720க்கு 710 எடுத்து அகில இந்திய அளவில் 36வது இடம் பிடித்துள்ளார். அதே பயிற்சி வகுப்பை சேர்ந்த என்.எஸ்.சஞ்சனா 705 மதிப்பெண் பெற்று 91வது இடம் பிடித்தார்.

மேலும், நான்கு வருட சுப்ரீம்+ஜெனித் பயிற்சி வகுப்பை சேர்ந்த ஷூஷ்ருத் ஜெய்கிஷன் 700 மதிப்பெண் பெற்று 348வது இடம் பிடித்தார். இதுமட்டுமின்றி, குறிப்பிடத்தக்க வகையில் 39 மாணவர்கள் 600 மதிப்பெண்ணுக்கு அதிகமாகவும், 58 பேர் 550க்கும் மேலும் மதிப்பெண் எடுத்துள்ளனர். மாணவர்களின் உறுதியான வெற்றிக்கு ஃபிட்ஜியின் வழிமுறைகள் அத்தாட்சியாக உள்ளது. மருத்துவத்துறையின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட மருத்துவ வல்லுநர்களை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் பணியாற்றும் ஃபிட்ஜியின் பயிற்சி முறைகளுக்கும், வெற்றிக்கான அயராத உழைப்புக்கும் சான்றாக நீட் 2023ன் மகத்தான தேர்ச்சி விளங்குகிறது.

The post நீட் போட்டித் தேர்வில் ஃபிட்ஜி மெடிக்கல் மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Fiji ,CHENNAI ,NEET 2023 ,NEET ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்