×

உடையார்குளத்தில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாசரேத், ஜூன் 20: உடையார்குளத்தில் மாற்றத்தைத் தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்குளம் பகுதியில் மாற்றத்தைத்தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் முன்னிலை வகித்தார். இதில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் எஸ்ஓஎஸ் செயலி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் ‘நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும், குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்” என்ற உறுதிமொழியையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றனர்.

The post உடையார்குளத்தில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Wadiyarkulam ,Nazareth ,Wodiyarkulam ,Vodiyarkulam ,Nazareth Police Station ,Dinakaran ,
× RELATED நாசரேத் நூலகத்தில் கவியரங்க நிகழ்ச்சி