×

மறைமலைநகர் நகராட்சியில் கொட்டும் மழையில் தேங்கிய நீரை அகற்றிய நகராட்சி ஊழியர்கள்

செங்கல்பட்டு: மறைமலைநகர் நகராட்சியில், தேங்கிய மழை நீரை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாதவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர்‌ எச்சரித்துள்ளார். மறைமலைநகர் நகராட்சி பகுதிகளில பெய்த தொடர் மழையால் கலைவாணர் தெரு, வள்ளல் அதியமான் தெரு, பாவேந்தர் சாலை, அடிகளார் சாலை, வள்ளல் குமரன் தெரு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டு சாலையிலேயே நின்றது இதனையடுத்து நகராட்சி ஆணையர்‌ செளந்தராஜன்‌ தலைமையில் கொட்டும்‌ மழையில் நகராட்சி ஊழியர்கள் மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை‌ சரிசெய்து மழை நீர் செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர்‌.

இது குறித்து நகராட்சி ஆணையர்‌ கூறுகையில், ‘‘தனியாரால் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால், அதன் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு அகற்றாத பட்சத்தில் நகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, உரிய அபராதமும் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள், கடைக்காரர்கள், தொழில் நிறுவனங்கள் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து இருந்தால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும். பேரிடர் கால அவசர உதவிக்கு நகராட்சி ஆணையரை 73973 82211 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.’’ என்றார்.

The post மறைமலைநகர் நகராட்சியில் கொட்டும் மழையில் தேங்கிய நீரை அகற்றிய நகராட்சி ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Chiramalayanagar municipality ,Chengalpattu ,Chiramalai Nagar Municipality ,Thiramalayanagar Municipality ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!!