×

9ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் புதிய பாடங்களாக செம்மொழி நாயகன் கலைஞர், தமிழகத்தின் சிற்பி கலைஞர்: திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி

நாகப்பட்டினம்: அடுத்தாண்டு 9ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் செம்மொழி நாயகன் கலைஞர், தமிழகத்தின் சிற்பி கலைஞர் என்ற புதிய பாடங்களை சேர்க்க உள்ளதாக திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார். நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக மண்டல அலுவலகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பள்ளிகள் திறந்தவுடன் 85 சதவீத பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதால் 10 சதவீதம் கூடுதலாக தமிழ் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கண்ணியமாக மேடையில் பேசவேண்டும் என முதல்வர் கடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 9ம் வகுப்பு பாடபுத்தகத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கலைஞர் கருணாநிதி என்று இருந்ததை வெள்ளை பேப்பர் ஒட்டி மறைத்தனர். இந்தாண்டு திராவிட மொழி குடும்பம் என்ற பாடத்தை 9ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சேர்த்துள்ளோம். அடுத்த ஆண்டு செம்மொழி நாயகன் கலைஞர், தமிழகத்தின் சிற்பி கலைஞர் என்ற புதிய பாடங்களை சேர்க்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post 9ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் புதிய பாடங்களாக செம்மொழி நாயகன் கலைஞர், தமிழகத்தின் சிற்பி கலைஞர்: திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dindigul I. Leoni ,Nagapattinam ,
× RELATED பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா