×

கடையம் அருகே கிடா சண்டையில் உயிரிழந்த ஆடு: சமூகவலைதளங்களில் `வீடியோ’ வைரல்

கடையம்: தமிழகம் முழுவதும் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது இதனை அடுத்து இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள சம்மன்குளத்தில் குர்பானி கொடுப்பதற்காக மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து விலை உயர்ந்த ஆடுகளை வாங்கி வந்து வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகளை அங்குள்ள சிறுவர்கள், இளைஞர்கள் ேவடிக்கைக்காக சண்டையில் ஈடுபட்ட வைத் தனர்.

அப்போது சுமார் மூன்று வயது உடைய 2 ஆடுகளை விளையாட்டுக்காக சண்டையில் ஈடுபடுத்தியபோது தொடர்ந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டது. தொடர்ந்து சிறிது நேரத்தில் அதில் ஒரு ஆடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. 2 ஆடுகள் மோதும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கடையம் அருகே கிடா சண்டையில் உயிரிழந்த ஆடு: சமூகவலைதளங்களில் `வீடியோ’ வைரல் appeared first on Dinakaran.

Tags : Goat ,in ,Kita fight ,Bakrit ,Bakreet ,Tamil Nadu ,
× RELATED ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!