×

நெல்லைக்கு, ஒட்டன்சத்திரம் குண்டு மிளகாய் வரத்து அதிகரிப்பு

நெல்லை: நெல்லை சந்தைகளுக்கு ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து குண்டு மிளகாய் வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை டவுன் மற்றும் பாளை காய்கனி சந்தைகளுக்கு ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து குண்டு மிளகாய் இன்று அதிகளவில் வந்து இறங்கின. சமையலுக்கு மட்டுமின்றி மோர் மிளகாய், ஊறுகாய் போன்றவைகளுக்கு இந்த வகை குண்டு மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது வந்துள்ள சிறிய ரக குண்டு மிளகாய் கிலோ ரூ.100 என்ற விலையில் விற்பனையாகிறது. விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அதிகம் வாங்கிச் செல்கின்றனர்.

The post நெல்லைக்கு, ஒட்டன்சத்திரம் குண்டு மிளகாய் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Otanshatham ,Dinakaran ,
× RELATED இணைந்திருக்கும் தெய்வீக இசை