×

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை..!!

சீனா: ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 29 வயதான அவர், சீனாவின் வுக்ஸியில் நடந்த ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான சேபர் பிரிவில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார். கடினமான அரையிறுதியில் பவானி 14-15 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சைனாப் தயிபெகோவாவிடம் தோல்வியடைந்தார். முன்னதாக, காலிறுதியில் நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை 15-10 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, பவானி இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

மேலும் 2022 ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மிசாகி பெண்களுக்கான சேபர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். இந்நிலையில் சீனாவில் நடைபெறுகிற ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி அரையிறுதியில், பவானி, உஸ்பெகிஸ்தானின் ஜெய்னாப் தயிபெகோவாவை எதிர்த்துப் போட்டியிட்டதில் தோல்வியை தழுவி அடுத்த சுற்று போட்டியில் கஜகஸ்தானின் டோஸ்பே கரினாவை வீழ்த்துவதற்கு முன்பு 64-வது சுற்றில் விடை பெற்றார்.

பின்னர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பவானி 15-11 என மூன்றாம் நிலை வீராங்கனை ஓசாகி செரியை வீழ்த்தினார். பவானியின் வரலாற்று சாதனைக்கு இந்திய வாள்வீச்சு சங்கத்தின் பொதுச்செயலாளர்ராஜீவ் மேத்தா வாழ்த்து தெரிவித்தார். மதிப்புமிக்க ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்ற பவானி தேவி, டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் 32-வது சுற்றில் வெளியேறினார்.

The post ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை..!! appeared first on Dinakaran.

Tags : Bhavani Devi ,Tamil Nadu ,Asian Championship Fencing Competition ,China ,Tamilnadu ,Asian Championship Fencing ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...