×

காலிஸ்தான் தீவிரவாதி கனடாவில் சுட்டுக் கொலை

கனடா: கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் பஞ்சாபின் ஜலந்தரில் சாமியார் கமல்தீப் சர்மா என்பவரை காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் கனடாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு தேடி வந்தது. அவரது தலைக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கனடாவில் பதுங்கியிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் சர்ரேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட காலிஸ்தான் தீவிரவாதிகளின் பட்டியலில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் உட்பட 40 தீவிரவாதிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதால், இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கனடா அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காலிஸ்தான் தீவிரவாதி கனடாவில் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Canada ,Kamaldeep Sharma ,Jalandhar, Punjab ,Hardeep ,Dinakaran ,
× RELATED கனடா சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி, பேரன் பலி