×

புதுகையில் அரசு பல் மருத்துவக்கல்லூரி விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து அவர் அளித்த பேட்டி:

தமிழகத்திலேயே 2வது அரசு பல் மருத்துவமனை, புதுகையில் விரைவில் துவங்கப்பட்டு இந்தாண்டு 50 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதேபோல் மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக 6 பேராசிரியர், 11 இணை பேராசிரியர், 30 உதவி பேராசிரியர், 102 ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் ஜூலை 15ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பல் மருத்துவக்கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் வாரிய பணிகள் நடந்ததால் தற்போது பெய்து வரும் மழையால் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது பெய்து வரும் மழையை ஒருநாள் மழையாக தான் பார்க்க வேண்டும். எனவே சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு தேவையில்லை. இருப்பினும் மருத்துவத்துறை நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.

நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தும் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவில்லை. கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் தூங்கியதாலும், அவரது நிர்வாக சீர்கேட்டாலும் தான் இதுவரை செய்ய முடியாத விஷயங்களை தற்போது நாங்கள் செய்து வருகிறோம்.

கடந்த 15 மாதத்தில் 6,03,000 சதுர அடி பரப்புள்ள கிண்டி பன்னோக்கு மருத்துவ கட்டிடத்தை தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக கட்டி திறக்கப்பட்டுள்ளது முதல்வரின் சாதனையாகும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 1.50 லட்சம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post புதுகையில் அரசு பல் மருத்துவக்கல்லூரி விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Government Dental College ,Puducherry ,Chief Minister ,M. K. Stalin ,Minister ,M. Subramanian ,Pudukottai ,Hospital Construction ,M.Subramanian ,M.K.Stal ,
× RELATED புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் டெல்லி புறப்பட்டார்