×

உரிமம் இன்றி பைக் ஓட்டிய 8 மாணவர்களுக்கு உடனடி எல்எல்ஆர் போலீசார் நடவடிக்கை குடியாத்தம் நகரில்

குடியாத்தம்: குடியாத்தம் நகரில், உரிமம் இல்லாமல் பைக் ஓட்டிய 8 மாணவர்களுக்கு போலீசார் சார்பில் உடனடியாக பயிற்சி அளிக்கப்பட்டு, எல்எல்ஆர் வழங்கப்பட்டது. குடியாத்தம் நகரில், சாலையில் செல்பவர்கள் மீது பைக்குகள் மோதுவது அல்லது எதிர்வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. இவற்றில் பெரும்பாலான விபத்துகள் சிறுவர்கள் மற்றும் மாணவர்களால் ஏற்படுவதாக எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று குடியாத்தம் அடுத்த காந்தி நகரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மாணவர்கள் வந்த பைக்குகளை போலீசார் தடுத்து நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். அதில், குடியாத்தத்தில் உள்ள அரசு கல்லூரியில் படிக்கும் 8 மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மாணவர்களுக்கு உரிய ஓட்டுனர் பயிற்சி அளித்தனர். பின்னர், 8 மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செய்து உடனடியாக எல்எல்ஆர் வழங்கப்பட்டது. மேலும், குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு போலீசார் எடுத்து கூறினர்.

The post உரிமம் இன்றி பைக் ஓட்டிய 8 மாணவர்களுக்கு உடனடி எல்எல்ஆர் போலீசார் நடவடிக்கை குடியாத்தம் நகரில் appeared first on Dinakaran.

Tags : LLR ,Gudiatham city ,Kudiatham ,Kudiatham city ,Dinakaran ,
× RELATED அதிக வட்டி ஆசை காட்டி ₹1 கோடி மோசடி...