×

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை

தூத்துக்குடி: தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் பங்காரு அடிகளார் அவ‌தார பெருமங்கல விழாவை முன்னிட்டு மழைவளம் வேண்டியும், தாமிரபரணியில் நீராதாரம் பெருகவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. தூத்துக்குடி 3வது மைல் அருகே திருவிக நகரில் உள்ள‌ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் பங்காரு அடிகளார் 83வது அவ‌தார பெருமங்கல விழா நடந்தது. உலக சமாதான‌ம் வேண்டியும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தாமிரபரணியில் நீராதாரம் பெருகவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில் வளம் வேண்டியும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். வேள்வி பூஜையில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு 1008, 108 தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு சக்திபீடத்தின் சார்பில் தையல் இயந்திரம், இலவச சேலை, கல்வி உதவித்தொகை, கண் பார்வை இழந்த இளைஞருக்கு தொழில் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி வழங்கினார். விழாவில், ஆன்மிக இயக்க பொருளாளர் கண்ணன், வேள்விக்குழு கிருஷ்ணநீலா, பிரசாரம் முத்தையா, இளைஞர் அணி செல்லத்துரை, சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, வேள்விக்குழு பத்மாவதி, மகளிர் அணி பிரமிளா, வட்டத் தலைவர்கள் செல்வம், அழகர், இளைஞர் அணி மணி, ஏட்டு மந்திரம், சந்தணவேல், ஜெயராமன், தேவராஜ், புதியதுறைமுகம் கண்ணகி, குளத்தூர் உஷா, பழனிமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

The post தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை appeared first on Dinakaran.

Tags : Kalasa Lamp Velvi Pooja ,Thiruvik Nagar ,Sakthi Peedam ,Thoothukudi ,Bangaru Adikalar Avatara Perumangala festival ,Tiruvik Nagar Sakthi Peedam ,Tamiraparani ,
× RELATED திரு.வி.க நகர் தொகுதி 74வது வார்டில்...