×

முத்தையாபுரம் அருகே பைக்கிலிருந்து வியாபாரி தவறி விழுந்ததில் முட்டைகள் சேதம்

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி முத்தையாபுரம் ஆதிபராசக்திநகர் அருகே முட்டை வியாபாரி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள முட்டைகள் சேதமடைந்தன. தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(54). இவர் கீதாநகர், அபிராமிநகர், எம் சவேரியார்புரம், முள்ளக்காடு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பைக்கில் சென்று முட்டை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று ஆதிபராசக்திநகர் அருகே பெருமாள் பைக்கில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பைக்கில் இருந்த ரூ.6ஆயிரம் மதிப்புள்ள முட்டைகள் சேதம் அடைந்தன. அந்தப்பகுதியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டதுடன், சேதமடையாத முட்டைகளை பிரித்து கொடுத்தனர்.

The post முத்தையாபுரம் அருகே பைக்கிலிருந்து வியாபாரி தவறி விழுந்ததில் முட்டைகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Muttiahpuram ,Spikenagar ,Adiparashaktinagar ,Tuticorin ,
× RELATED கொலை முயற்சி வழக்கில் தொடர்பு குண்டாசில் மூவர் கைது