×

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் புகழாரம் பாதசாரிகள் வலியுறுத்தல் பாடாலூர் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தில் பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்தபோது, தவறி கீழே விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பெரியசாமி (49). இவர் நாட்டார்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரில் ஜூன் 7ம் தேதி அமர்ந்திருந்தார். அப்போது தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பெரியசாமி உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் புகழாரம் பாதசாரிகள் வலியுறுத்தல் பாடாலூர் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு appeared first on Dinakaran.

Tags : Perambalur District ,Padalur Padalur ,Natarmangalam ,Aladhur taluk ,Perambalur District Collector ,Padalur ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம்...