×

பாகிஸ்தானில் குற்ற வழக்கில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை நீக்கம்: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியிருப்பதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்தது. இதையடுத்து அவர் எம்பி மற்றும் பிரதமர் பதவியை இழந்தார். வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக 2019ல் இங்கிலாந்து சென்ற ஷெரீப் பின்னர் நாடு திரும்பவில்லை. பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் தம்பி பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், குற்ற வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் மட்டுமே தடை விதிக்கும் வகையில் அரசியல் திருத்த மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்காக அரசியல் சட்ட பிரிவு 232 ஐ திருத்துவதற்கான மசோதா செனட் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீப்புக்கு விதிக்கப்பட்டுள்ள வாழ்நாள் தடையை விலக்கும் வகையில்தான் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

 

The post பாகிஸ்தானில் குற்ற வழக்கில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை நீக்கம்: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Lifetime ,Pakistan ,Islamabad ,Nawaz Sharif ,Dinakaran ,
× RELATED என்கவுன்டரில் 23 தீவிரவாதிகள் பலி: 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு