×

மைக்ரோசாப்ட் தகவல் அவுட்லுக் இடையூறுக்கான காரணம் சைபர் தாக்குதல்

பாஸ்டன்: இம்மாத தொடக்கத்தில் அவுட்லுக் இமெயில் சேவை, ஒன்டிரைவ் கோப்பு-பகிர்வு ஆப் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தளத்தில் ஏற்பட்ட இடையூறுக்கு சைபர் தாக்குதலே காரணம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் இமெயில் சேவை, ஒன்டிரைவ் கோப்பு-பகிர்வு ஆப் மற்றும் கிளவுட் கம்யூட்டிங் தளம் ஆகியவற்றில் இம்மாத தொடக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இமெயில் சேவை முடங்கியதால் உலகம் முழுவதும் பயனர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த இடையூறுக்கு சைபர் தாக்குதலே காரணம் என மைக்ரோசாப்ட் விளக்கம் அளித்துள்ளது. இதன் பின்னணியில் அனாய்மோயஸ் சூடான் என்ற ஹேக்கிங் குழு இருப்பதாகவும், அது சைபர் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இதனால் எத்தனை பயனர்கள் பாதிக்கப்பட்டனர், அதன் தாக்கம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஹேக்கிங் குழு ரஷ்யாவை சேர்ந்ததாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே, மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், மிக அதிகமான பயனர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், தனிப்பட்ட தகவல்களும் கசிந்திருக்கலாம் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகம் கிளப்பி உள்ளனர்.

The post மைக்ரோசாப்ட் தகவல் அவுட்லுக் இடையூறுக்கான காரணம் சைபர் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Microsoft ,Boston ,Dinakaran ,
× RELATED நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில்...