×

காஞ்சி, செங்கை மாவட்டத்தில் மிதமான சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம், ஜூன் 19: காஞ்சிபுரத்தில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்தது. கோடையில் வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரக் காலம் முடிந்தும் காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், பொதுமக்கள் தவித்து வந்தனர். நண்பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் பொதுமக்கள், வீடுகளிலேயே முடங்கினர். இரவு நேரங்களில் வெக்கை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. நேற்று காலை சிறுதூறலாக மழை பிற்பகல் வரை தொடர்ந்தது. வெயிலின் உக்கிரத்தால் தவித்த மக்கள் திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், அய்யங்கார்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதோபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது.

The post காஞ்சி, செங்கை மாவட்டத்தில் மிதமான சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kanchi, Sengai district ,Kanchipuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...