×

ஊட்டி அருகே ஊருக்குள் புகுந்து பசு மாட்டை வேட்டையாடிய புலி: வீடியோ வைரல்- கிராம மக்கள் பீதி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, புலி, சிறுத்தை, கரடி, காட்டுயானை மற்றம் காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதால், அடிக்கடி மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, கால்நடைகளையும் வேட்டையாடி செல்கின்றன. குறிப்பாக, வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் வளர்க்கும் கால்நடைகளை சிறுத்தை மற்றும் புலிகள் வேட்டையாடுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், ஊட்டி அருகே தலைகுந்தா நீத்தி பகுதியில் புலி ஒன்று பசுமாட்டை வேட்டையாடி இழுத்து செல்கிறது. இதனை சிலர் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோக தற்போது சமூக வளைத்தலங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் வாழும் பகுதிக்கு வந்து பசுமாட்டை வேட்டையாடி சென்ற புலியால், அப்பகுதிகளில் வாழும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பசுமாட்டை வேட்டையாடிய புலியை கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஊட்டி அருகே ஊருக்குள் புகுந்து பசு மாட்டை வேட்டையாடிய புலி: வீடியோ வைரல்- கிராம மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Oodi ,Nilgiri district ,
× RELATED பணியிடங்களில் பாலியல் தொல்லை...