×

பாகிஸ்தான் அங்கு வென்று காட்டவேண்டும்; அகமதாபாத் மைதானத்தில் பேய் பிடித்துள்ளதா?.. ஷாகித் அப்ரிடி காட்டம்

லாகூர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15ம்தேதி அகமதாபாத் ஸ்டேடியத்தில் மோதும் என வரைவு போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் ஆட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. போட்டிக்கான வரைவு அட்டவணையை ஒருதலைப்பட்சமாக அங்கீகரிக்க முடியாது என்று கூறி பிசிபி ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதுபற்றி பிசிபி தலைவர் நஜாம் சேத்தி உலகக் கோப்பை அட்டவணைக்கு ஒப்புதல் வழங்க முடியாது என்று நாங்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்தியாவுக்கு செல்வது குறித்து அரசாங்கம் தான் முடிவு செய்யவேண்டும். அகமதாபாத்தில் விளையாடுவீர்களா என்று எங்களிடம் கேட்பதில் அர்த்தமில்லை. முதலில் போகிறோமா இல்லையா என்று முடிவு செய்யப்படும், பிறகு எங்கு செல்வது என்பதை அரசு முடிவு செய்யும் என்றார். அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் தெளிவுபடுத்தியதால், பெரும்பாலும் சென்னை அல்லது பெங்களூருவில் பாகிஸ்தானுடன் இந்தியா மோத உள்ளது.

இதனிடையே பாகிஸ்தானின் பிடிவாதத்திற்கு முன்னாள் கேப்டன் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், ஏன் அகமதாபாத்தில் விளையாட மறுக்கிறார்கள்? அது தீயை வீசுகிறதா அல்லது பேய் பிடித்துள்ளதா என கேள்வி எழுப்பி உளளனார். அங்கு சென்று வென்று காட்டவேண்டும். அங்கு சென்று ஆடவது தான் முன்னறிவிக்கப்பட்ட சவால்கள் என்றால், அவற்றை சமாளிப்பதற்கான ஒரே வழி விரிவான வெற்றிதான். இறுதியில் முக்கியமானது பாகிஸ்தான் அணியின் வெற்றி. முக்கிய விஷயம் அதில் மட்டுமே உள்ளது. இதை நேர்மறையாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவுக்கு அங்கு சாதகமாக இருந்தால், நீங்கள் சென்று, நிரம்பிய ரசிகர்கள் கூட்டத்தின் முன் வெற்றியை இழுக்க வேண்டும். நீங்கள் வென்று அவர்களுக்குக் காட்டுங்கள், என்றார்.

The post பாகிஸ்தான் அங்கு வென்று காட்டவேண்டும்; அகமதாபாத் மைதானத்தில் பேய் பிடித்துள்ளதா?.. ஷாகித் அப்ரிடி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Ahmedabad ,Shahid Afridi ,Lahore ,Cricket World Cup ,India ,Shahid Afridi Khattam ,Dinakaran ,
× RELATED சென்னையில் 4 விமான சேவை ரத்து