×

கரடி சோலை அருவியை காண கிடைக்குமா அனுமதி?: சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில், கரடி சோலை அருவியை காண அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர் பகுதியின் அருகிலேயே அமைந்துள்ளது கரடி சோலை அருவி. இந்த அருவியை காண்பதற்கு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். கொடைக்கானல் ஏரிக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் அருகில் இந்த அருவி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மழைக்காலங்களில் இந்த அருவியை காண அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த அருவி பார்ப்பதற்கு மிக அழகாகவும் இருக்கும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி கடந்த பல மாதங்களுக்கு முன்பாக மூடப்பட்டது.

இதற்கிடையே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்கள் தற்போது திறக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அவற்றை காண்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கரடி சோலை அருவி மட்டும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. கொடைக்கானல் நகர் மன்ற கூட்டத்தில், உறுப்பினர்கள் கரடி சோலை அருவியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே விரைவில் கரடி சோலை அருவியை காண சுற்றுலாப்பயணிகள் அனுமதிப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கரடி சோலை அருவியை காண கிடைக்குமா அனுமதி?: சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bear ,Oasis ,Kodaikanal ,Dindukal District ,Kodicanal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் மலை கிராமத்தில்...