கிருஷ்ணராயபுரம், ஜூன் 18: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடர் பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 முதல் 10ம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி லாலாபேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாயனூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் நடைபெற்றது.இதில் கிருஷ்ணராயபுரம் வட்டார அளவில் 48 பள்ளிகளை சார்ந்த 293 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ராமநாதன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்து கருத்துரைகளும் வழிகாட்டுதலும் வழங்கினர்.
இப்பயிற்சியில் குழந்தைகளின் மனநலம், உடல் நலம் பாதுகாத்தல், மன எழுச்சி சார்ந்த பிரச்னைகள் அவைகளுக்கான தீர்வுகள், கல்வி இணைச் செயல்பாடுகள், பள்ளிகளில் செயல்படும் இலக்கிய மன்றம் வானவில் மன்றம் உள்ளிட்ட அனைத்து மன்ற செயல்பாடுகள் சிறப்புடன் நடத்திடவும், கலைத்திருவிழா செயல்பாடுகள் மூலம் நாடகம், இசை காட்சிக் கலைகள், நாட்டுப்புற கலைகளில் மாணவ-மாணவிகளின் திறன்களை வெளிக்கொணரும் வகையில், மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும், பள்ளிகளில் காண்பிக்கப்படும் சிறார் திரைப்படங்களால் ஏற்படும் நன்மைகன் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.குழந்தைகளின் உடல்நலம், மனநலம் சார்த்த ஆலோசனைகளை டாக்டர் ஹரிஹரன் மற்றும் டாக்டர் சிமீரா ஆகியார் விளக்கிக் கூறினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், மேற்பார்வையாளர் (பொ) முத்துக்குமார் ஆகியோர் பயிற்சி மையங்களை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர். மேற்பார்வையாளர் தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒருங்கிணைந்து பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
The post 48 பள்ளிகளைச் சார்ந்த 293 ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.
