×

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி 1,500 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.41.58 லட்சத்தில் பரிசு, பாராட்டு சான்றிதழ்

பெரம்பலூர்,ஜூன்18: பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 1500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் வீ ராங்கனைகளுக்கு அமைச்சர் சிவசங்கர் ரூ.41.58லட்சம் மதிப்பிலான பரிசு தொகை, பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று(17ம்தேதி) பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண் டு 1500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்களை நபர்களுக்கு ரூ.41.58 லட்சம் மதிப்பிலான பரிசு தொகையினையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பேசுகையில்,தமிழ்நாடு முதல்வர் நடந்து முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் அடுத்தகட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வர வேண்டும், அவர்களுக்கென லட்சியக் கனவு இருக்க வேண்டும், அந்த கனவோடு எதிர்காலங்களில் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த போட்டிகளை நடத்தினார்.

வெற்றி பெறுபவர்களை உற்சாகப்படுத்தினால் தான் எதிர்காலங்களில் மேலும் அதிகப்படியான போட்டியில் பங்கேற்க வருவார்கள் என்பதற்காகத்தான் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவது போல விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் இந்த விளையாட்டு போட்டிகளுக்கும் நிதி ஒதுக்கியுள்ளார். அடுத்தகட்டமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள செய்ய ஏதுவாக நிதி ஒதுக்கியுள்ளார். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலும் வெற்றி பெற வேண்டும். மாநில அளவில் வெற்றி பெற முடியாதவர்கள் அடுத்தமுறை நாம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொ டர்ந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும். விளையாட்டை பொறுத்த வரை தொடர் பயிற்சி என்பதுதான் நம் மை தயார்படுத்தும், உறுதி ப்படுத்தும். அதற்காக நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

முன்னதாக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்காக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இலச்சினையினை விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பா ர்வையிடும் வகையில் அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட கலெக்டர் கற்பகம் ஆகியோர் வெளியிட்டு அறிமுகப்படுத்தினர். விழாவில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி, தனலட்சுமி சீனி வாசன் கல்விக் குழுமங்களின் செயலர் நீல்ராஜ், பெரம்பலூர் நகராட்சித்தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத்தலைவர் ஹரிபா ஸ்கர்,வேப்பந்தட்டை ஒன்றி யக்குழு தலைவர் ராமலிங் கம், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்),ஜாஹிர்உசேன் (லெ ப்பைக்குடிக்காடு), மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி 1,500 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.41.58 லட்சத்தில் பரிசு, பாராட்டு சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : Chief Minister Cup ,Perambalur ,Chief Minister's Cup ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...