கண்ணமங்கலம், ஜூன் 18: கண்ணமங்கலம் அங்காளம்மன் கோயில் வளாகத்தில் நேற்று ஆனி மாத பிறப்பையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கண்ணமங்கலம் நாகநதிக்கரையில் பழமையான அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும்அம்மன் ஊஞ்சல் தாலாட்டு, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆனி மாத பிறப்பையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள், குங்குமம், மாங்கல்யம் உள்ளிட்ட மாங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கிடும், மாங்கல்யம் பாக்கியம் கைகூடும், மழலை பேரு, லஷ்மி கடாட்சம், மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்து, நாட்டிலும் வீட்டிலும் நிம்மதி சந்தோஷம் உற்சாகம் நிறைந்திடும் என்பது ஐதீகம். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பருவதராஜகுல அம்மனடி தொண்டர்கள் செய்திருந்தனர்.
The post 108 திருவிளக்கு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு கண்ணமங்கலம் அங்காளம்மன் கோயிலில் appeared first on Dinakaran.
