×

சட்டப் பணிகள் விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கம்: மாவட்ட முதன்மை நீதிபதி துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில், சட்டப் பணிகள் விழிப்புணர்வு பிரசார வாகன துவக்க விழா நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி ஜா.மேவிஸ் தீபிகா சுந்தரவதனா கொடி அசைத்து துவக்கி வைத்தார். தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு இணைந்து “பான் இந்தியா அவேர்னஸ் அண்டு அவுட்ரிச்” என்ற விழாவை நடத்தின. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து சட்டப் பணிகள் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகன பேரணி நேற்று நடந்தது. இதனை, மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஜா.மேவிஸ் தீபிகா சுந்தரவதனா கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவினர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்….

The post சட்டப் பணிகள் விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கம்: மாவட்ட முதன்மை நீதிபதி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : District Primary Justice ,Chengalputtu ,Chenkalputtu Court ,District Primary ,Judge ,J.A. Mavis ,District ,Primary ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து