×

காங்கிரசில் சேருவதை விட கிணற்றில் குதிப்பேன்: கட்கரி

நாக்பூர்: காங்கிரஸ் கட்சியில் சேர்வதை விட கிணற்றில் குதிப்பேன் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாஜ வியாபாரிகள் சங்க கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில்,‘‘ தேசியம் என்பது கட்சியின் உயிர் நாடி. நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருப்பது பாஜவின் விருப்பம் ஆகும். நாடு பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக ரீதியாக பலமானதாக மாற வேண்டும். எங்களுக்கு அரசியல் சட்டம் பகவத் கீதை, பைபிள், குரான் போன்றது. அந்த விதிகளின்படி சமூகத்தை ஒழுங்குப்படுத்த வேண்டுமானால் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார். பண்டாராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,‘‘ பல ஆண்டுகளுக்கு முன் காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜிக்கர் காங்கிரசில் சேர்ந்தால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறினார். நான் அதற்கு, காங்கிரசில் சேருவதை விட கிணற்றில் குதித்து விடுவேன் என்று தெரிவித்தேன்’’ என்றார்.

The post காங்கிரசில் சேருவதை விட கிணற்றில் குதிப்பேன்: கட்கரி appeared first on Dinakaran.

Tags : Congress ,Gadkari ,Nagpur ,Union Minister ,Nitin Gadkari ,Congress party ,Maharashtra ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணியில் பரபரப்பு...