×

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 21 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

கவுகாத்தி: ஒப்பந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 21 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில், நேஷனல் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் கேபிளை அமைப்பதற்கான ெடண்டர் கோரப்பட்டது. ஒரு கிலோமீட்டருக்கு ரூ.90,000 வீதம் ஒப்பந்தம் போடப்பட்டதில் விதிமீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சுமார் ரூ.22 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இவ்விவகாரம்ா குறித்து சிபிஐ வழக்கு பதிந்து, சமீபத்தில் அசாம், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, அரியானா ஆகிய மாநிலங்களில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகள் உட்பட மொத்தம் 25 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த வழக்கில், ஜோர்ஹாட், சிப்சாகர், கவுகாத்தி போன்ற இடங்களில் பணியாற்றிய முன்னாள் பொது மேலாளர், துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர், தலைமை கணக்கு அதிகாரி உட்பட 21 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அதனால் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 21 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு appeared first on Dinakaran.

Tags : BSNL ,CPI ,Gauwahati ,CBI ,Dinakaran ,
× RELATED பிஎஸ்என்எல் டவர்களில் சோதனை ஓட்டம்