×

ஸ்குவாஷ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எகிப்து அணி..!!

சென்னை: ஸ்குவாஷ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை எகிப்து அணி வென்றுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் உலக அளவில் பங்கேற்றனர். 8 அணியிலும் இறுதி லீக் போட்டிகள் முடிந்து இறுதி போட்டிக்கு எகிப்து அணியும் மலேசிய அணியும் முன்னேறி விளையாடினர்.

முதலில் விளையாடிய எகிப்து வீரர் அலி அபோ மற்றும் மலேசிய வீரர் டேரன் பிரகாசம் மோதி கொண்ட போட்டியில் 3-1 என்கின்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார். அதன் பின் விளையாடிய எகிப்து வீரர் அலி அபோ மலேசிய வீரர் டேரன் பிரகாசம் உடன் மோதி அதிரடியாக விளையாடி 3-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டு அணிகளுமே சம புள்ளிகளுடன் இருந்த நிலையில் மூன்றாவது செட் தொடரப்பட்ட நிலையில் எகிப்தின் முன்னணி வீரர் அலி அபோ மலேசிய அணியின் டேரன் பிரகாசமுடன் 4-1 என்ற செட் கணக்கில் விளையாடி எகிப்து அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். இந்நிலையில் இன்று மாலை 7 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது..

The post ஸ்குவாஷ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எகிப்து அணி..!! appeared first on Dinakaran.

Tags : Squash World Cup ,Chennai ,Egypt ,Malaysia ,Dinakaran ,
× RELATED 4வது சுற்றில் ரைபாகினா