×

சிறுநீரகத்தில் 790 கிராம் ‘கல்’: இலங்கை நோயாளி கின்னஸில் இடம்பெற்றார்

இலங்கை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கேனிஸ்டஸ் (62) என்பவருக்கு சிறுநீரக தொற்று பிரச்னை இருந்தது. அவரது சிறுநீரகத்தை பரிசோதித்த போது, பெரிய கல் ஒன்று சிறுநீரக பாதையை அடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் அந்த கல்லை அகற்றுவதற்கான வேலைகளை மருத்துவர்கள் தொடங்கினர். மிகவும் துல்லியமான அறுவை சிகிச்சையின் மூலம் கேனிஸ்டஸின் சிறுநீரகத்தில் அடைப்பட்டு இருந்த 5.26 அங்குல நீளம், 4.15 அங்குல அகலமும் கொண்ட சிறுநீரகக் கல்லை அகற்றினர். அதன் எடை 1.76 பவுண்டுகள் (0.79 கிலோ) இருந்தது. தலைநகர் கொழும்பில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நடந்த அறுவைசிகிச்சை மூலம், இந்த நோயாளிக்கு சிறுநீரக கல் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

இதன் வீடியோ வைரலாகி வரும் நிலையில், சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவிலான சிறுநீரக கல் அகற்றியதில் கேனிஸ்டஸின் கல் மிகப்பெரியதாகவும், அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட மிகப்பெரிய கல் என்றும் கூறப்படுகிறது. அதனால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இந்த சிறுநீரக கல் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த விலாஸ் குகே என்பவரின் சிறுநீரகத்தில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 13 செமீ (5.11 அங்குலம்) அளவிலான சிறுநீரகக் கல் அகற்றப்பட்டது. இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. அதன்பின் கடந்த 2008ம் ஆண்டு முதல் 620 கிராம் எடை கொண்ட சிறுநீரக கல் அகற்றப்பட்ட வசீர் முஹம்மது (பாகிஸ்தான்) என்பவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். தற்போது இலங்கையை சேர்ந்தவர் மேற்கண்ட இருவரின் சாதனையும் முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

The post சிறுநீரகத்தில் 790 கிராம் ‘கல்’: இலங்கை நோயாளி கின்னஸில் இடம்பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Army ,
× RELATED இலங்கை ராணுவத் தளபதி, காவல்துறை...