×

விமானத்தின் காக்பிட்டில் சிக்கிய பறவை: விமானியின் மன உறுதிக்கு சல்யூட்

அமெரிக்காவின் ஈக்வடாரில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் காக்பிட்டில், வானத்தில் பறந்து கொண்டிருந்த பறவை ஒன்று விமான கண்ணாடியை உடைத்துக் கொண்டு அதனுள் சிக்கியது. இந்த சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. விமானத்தின் காக்பிட்டில் சிக்கிய அந்த பெரிய பறவையின் பாதி உடலுடன் ரத்தம் சொட்ட சொட்ட தொங்குகிறது. அதேநேரம் விமானியின் கை, முகங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவரது முகத்தில் ரத்தக் கறை படிந்திருந்தது. இருந்தாலும், அவர் விமானத்தை மிகவும் பத்திரமாக தொடர்ந்து இயக்கினார்.

இக்கட்டான நிலையில் தனது வலியை பொருட்படுத்தாமல் விமானத்தை தொடர்ந்து இயக்கிய அந்த விமானிைய பலரும் பாராட்டி வருகின்றனர். அதன்பின் அருகில் உள்ள விமான நிலையத்தில் அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். அந்த விமானி பெயர் ஏரியல் வாலியன்ட் என்பது அடையாளம் காணப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த பலரில், விமானப் பயிசியாளர் ஒருவர் பதிவேற்றிய பதிவில், ‘மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில், விமானிகள் தாங்கள் கற்றுக்கொண்ட பயிற்சியை சரியாக கையாள வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமானது. அதவை சரியாக இந்த விமானி செய்துள்ளார். அவருக்கு பாராட்டுகள்’ என்று தெரிவித்துள்ளார்.

The post விமானத்தின் காக்பிட்டில் சிக்கிய பறவை: விமானியின் மன உறுதிக்கு சல்யூட் appeared first on Dinakaran.

Tags : Ecuador ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...