×

பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவருக்கு புகார் அளிக்கலாம்: அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவருக்கு புகார் அளிக்கலாம் என்று பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவருக்கு புகார் அளிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணைய வழியில் செலுத்தலாம். பத்திரப்பதிவுக்கு வருவோர் பணம் கொண்டு வரத் தேவையில்லை. ஏடிஎம் கார்டு மூலம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவுக் கட்டணம் செலுத்தலாம். பதிவுத்துறையை மேம்படுத்த ஸ்டார் 3.0 எனும் பதிவுத்துறை செயலி விரைவில் கொண்டு வரப்படும். ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் பதிவுத்துறை அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது. என்று அவர் தெரிவித்தார்.

The post பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவருக்கு புகார் அளிக்கலாம்: அமைச்சர் மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy Petty ,Madurai ,Deeds Registration Department ,Murthy ,Dinakaran ,
× RELATED காவிரி பிரச்னை தீர்க்கப்படும்: கர்நாடக அமைச்சர் முனியப்பா பேட்டி