இம்பால்:லிபியா, சிரியா, நைஜீரியா போன்று உயிர் மற்றும் சொத்துக்களை யாரும் எந்த நேரத்திலும் அழைக்கும் வகையிலான நிலைமை மணிப்பூரில் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் நிஷிகாந்த் சிங் கவலை தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ம் தேதி முதல் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையே இன மோதல்கள் நடந்து வருகின்றனர். வன்முறை சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் ராணுவத்தின் நடவடிக்கையால் வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து வருகிறது. மாநில அமைச்சர்கள் வீடுகள் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில் தலைநகர் இம்பாலில் உள்ள ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சின் சிங் வீட்டினை முற்றுகையிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் அதனை தீ வைத்து எரித்தனர். அப்போது அமைச்சர் ரஞ்சின் சிங் வீட்டில் இல்லாததால் அவர் உயிர் தப்பினார். ஒன்றிய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மணிப்பூர் முழுவதும் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
மெய்தி மற்றும் குக்கி பழங்குடினருக்கும் இடையே மோதல்கள் தொடரும் சூழ்நிலையில் ஒன்றிய அரசு இதில் அவசர கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் வி.பி.மாலிக் அழைப்பு விடுத்துள்ளார். மாநிலத்தின் இருண்ட நிலைமை குறித்து மணிப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த ராணுவ அதிகாரியின் டுவிட்டை சுட்டிக்காட்டி உள்ள ஜெனரல் மாலிக் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அதனை டேக் செய்ததுடன் மணிப்பூர் விவகாரத்தில் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த தலைநகர் இம்பாலில் வசிக்கும் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் நிஷிகாந்த் சிங் மணிப்பூர் தற்போது அரசில்லா மாநிலம் போல் மாறியுள்ளதாக பதிவிட்டிருக்கிறார். லிபியா, சிரியா, நைஜீரியா போன்ற நாடுகளில் யாராலும், எப்போது வேண்டுமானாலும் உயிரும், உடைமையும் அளிக்கப்படலாம் என்ற நிலை மணிப்பூரிலும் ஏற்பட்டுள்ளதாக அவர் விமரிசித்துள்ளார். இதனிடையே இம்பாலில் கிழக்கு பகுதிகளில் தீ வாய்ப்பு சம்பவங்களும், வன்முறைகளும் வெடித்துள்ளதால் பதற்றம் தொடர்கிறது.
The post மணிப்பூர் வன்முறையை தடுப்பதில் அவசர கவனம் தேவை: முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் வி.பி.மாலிக் டுவிட்டர் பதிவு appeared first on Dinakaran.