×

ஹிரோஷிமா, நாகசாகியை தாக்கிய குண்டுகளை விட சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி வைத்த ரஷ்யா.. உக்ரைனில் பதற்றம்!!

மாஸ்கோ : உலக போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது வீசப்பட்ட குண்டுகளை விட 100 மடங்கு அதிக ஆற்றல் வாய்ந்த அணுகுண்டுகளை பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் படையெடுப்பு ஓர் ஆண்டை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் சர்வதேச பொருளாதார நீதிமன்றத்தில் உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புதின், தனது நட்பு நாடான பெலாரஸ் நாட்டிற்கு முதல் அனுசக்தி ஏவுகணைகளை வழங்கி இருப்பதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் பல அணு ஆயுத தொகுப்புகளை பெலாரஸ் நாட்டிற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் படைகள் பெரிய அளவில் போரில் ஈடுபட தொடங்கி உள்ள நிலையில், உக்ரைனின் எல்லையை ஒட்டிய பெலாரஸ் நாட்டில் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அணு
ஆயுதங்களை அந்நாட்டிற்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றின் முதல் பகுதி வந்தடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பெலாரஸ் அதிபர் Aleksandr Lukashenko, தடுப்பு நடவடிக்கைகளுக்காகவே இவை குவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து பெற்ற அணு ஏவுகணைகள் ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட சக்தி வாய்ந்த குண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை என்றும் அதிபர் கூறி இருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஹிரோஷிமா, நாகசாகியை தாக்கிய குண்டுகளை விட சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி வைத்த ரஷ்யா.. உக்ரைனில் பதற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Russia ,Hiroshima ,Nagasaki ,Belarus ,Ukraine ,Moscow ,Japan ,World War ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...