×

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கணவனை கொன்று புதைத்த மனைவி கைது..!!

கும்பகோணம்: பந்தநல்லூர் அருகே கணவனை கொன்று புதைத்த மனைவி கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தலூரில் கீழ மாந்தூரை சேர்ந்தவர் பாரதி, இவரது மனைவி திவ்யா(38) இவர்களுக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். பாரதி மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார்.

இந்நிலையில் திவ்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் குழந்தைகளுக்கும் தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த கணவர் பாரதி, மனைவி திவ்யாவிடம் இதுபற்றி கேட்டுள்ளார். ஆனால் அவர் அப்படி எந்த தொடர்பும் கிடையாது என்று கூறினார்.

இந்நிலையில் கீழ்மாந்தூர் கிராமத்தை சேர்ந்த பாரதி என்பவரை 20 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர் புகார் அளித்திருந்தார். விசாரணையில் பாரதியை அவரது மனைவி திவ்யா தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று புதைத்தது அமலமாகியுள்ளது. கணவனை கொன்று புதைத்த திவ்யா மற்றும் டேவிட்டை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கணவனை கொன்று புதைத்த மனைவி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam, Thanjam District Kumbakonam ,Bandanallur ,Bandalur ,Kumbakonam, Thanjana District ,Kumbakonam ,Thanjai District ,Dinakaran ,
× RELATED நடுரோட்டில் பைக்கை நிறுத்தி...