×

முதலமைச்சர் பற்றி அவதூறு: ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கைது

ஈரோடு: முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பிய ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கவுதம் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் கவுதம். இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து திமுகவையும், தமிழ்நாடு அரசையும் விமர்சித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பிய ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கவுதம் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகி கவுதமை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவர் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டது, இணையம் வாயிலாக பிறகு ஏமாற்றுதல், சமூக வலைதளங்களில் இரு பிரிவினர் இடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சென்னை அருகே செங்குன்றத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டிய புகாரில் அதிமுக நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளராக எஸ்.எம்.ஜி.சீனிவாசன் இருந்துது வருகிறார். அவர் நெல்சன் என்பவரிடம் ரூ.7.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். நெல்சன் தன்னிடம் பெற்ற கடனை திரும்ப கேட்ட போது அதிமுக பிரமுகர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து நெல்சன் தன்னிடம் பெற்ற ரூ.7.5 லட்சம் கடனை திருப்பிக் கேட்ட போது அதிமுக பிரமுகர் மிரட்டியதாக செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அதிமுக மாணவரணி செயலர் எஸ்.எம்.ஜி.சீனிவாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதம் வைத்திருத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post முதலமைச்சர் பற்றி அவதூறு: ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Erode Municipality District High Technology Division ,Erode ,Erode Municipality District Indirect Technology Division ,Gautam ,Erode Municipality District ,Chief Technical Division ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...