×

சிங்கம்புணரி சேவக பெருமாள் கோயிலில் விநாயகர் சந்திவீரன் கூடத்திற்கு செல்லும் விழா

சிங்கம்புணரி, ஜூன், 17: சிங்கம்புணரியில் புகழ்பெற்ற பூரணை புஷ்கலை உடனான சேவகப் பெருமாள் கோயில் உள்ளது, இக்கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கோயிலில் இருந்து விநாயகர் சந்திவீரன் கூடத்திற்கு செல்லும் விழா நடைபெற்றது. இதில் வண்ணமலர் அலங்கரிக்கப்பட்ட கேடகத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 10:30 மணிக்கு கோயிலில் இருந்து இரட்டை மாடுகள் பூட்டிய சப்பரத்தில் கீழக்காடு ரோடு வழியாக சந்திவீரன் கூடத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வழிநெடுக்கிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருக்கண் வைத்து சுவாமியை வழிபட்டனர். சந்திவீரன் கூடத்தில் பத்து நாட்கள் சிறப்பு வழிபாடுகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதைத்தொடர்ந்து ஜூன் 25ம் தேதி சந்திவீரன் கூடத்தில் இருந்து மீண்டும் சேவக பெருமாள் கோயிலுக்கு விநாயகர் கொண்டுவரப்பட்டு கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சிங்கம்புணரி சேவக பெருமாள் கோயிலில் விநாயகர் சந்திவீரன் கூடத்திற்கு செல்லும் விழா appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Santhiveeran Koodam ,Singampunari Sevaka Perumal Temple ,Singampunari ,Sevaka Perumal ,Temple ,Puranai Pushkala ,Vaikasi Festival… ,Chanthiveeran ,Kudam ,
× RELATED சேரன்மகாதேவி சாட்டுப்பால விநாயகர் கோயிலில் பால்குட விழா