×

இன்றைய மின்தடை பகுதிகள்

 

திருப்புத்தூர், ஜூன் 17: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆ.தெக்கூர் மற்றும் கீழச்சீவல்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆ.தெக்க்கூர் மற்றும் கீழச்சீவல்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று ஜூன்17ம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும்.

முக்கிய ஊர்களான ஆ.தெக்கூர், மருதிபட்டி, முறையூர், சூரக்குடி, எஸ்.எஸ்.கோட்டை, எருமைப்பட்டி, வஞ்சினிப்பட்டி, நெல்மேனிப்பட்டி, ஆவினிப்பட்டி, சேவினிப்பட்டி, அச்சரம்பட்டி, சந்திரன்பட்டி இளையாத்தங்குடி, கீழச்சீவல்பட்டி, கிளாமடம், மலம்பட்டி, சுண்டக்காடு வேலங்குடி மற்றும் இவைகளின் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்புத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

The post இன்றைய மின்தடை பகுதிகள் appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,A. Tekur ,Geecheevalpatti ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED விண்வெளி கண்காட்சி அமைச்சர் திறந்து வைத்தார்