×

அடுத்தடுத்த விபத்தில் 2 தொழிலாளிகள் பலி 2 பேர் படுகாயம்

சேத்துப்பட்டு, மே 25: சேத்துப்பட்டு அருகே அடுத்தடுத்து நடந்த விபத்தில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர். சேத்துப்பட்டு அடுத்த அனாதிமங்கலம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(50) ெதாழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உலகம்பட்டு கூட்ரோட்டில் இருந்து அனாதிமங்கலம் கிராமத்திற்கு நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ராஜேந்திரன் மீது மோதியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜேந்திரன் மீது மோதிய வாகனத்தின் முகப்பு விளக்கு சாலையில் விழுந்து கிடந்தது.

இந்த நிலையில் கங்கை சூடாமணி கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன், பச்சையப்பன், தீனதயாளன் ஆகிய மூவரும் தீனதயாளன் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். தீனதயாளன் வாகனத்தை ஒட்டி வரும்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் கிடந்த முகப்பு விளக்கு மீது பைக் ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டதில் மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கமலக்கண்ணன் (49) மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பிச்சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

 

The post அடுத்தடுத்த விபத்தில் 2 தொழிலாளிகள் பலி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chetupatta ,Rajendran ,Anathimangalam Amman Koil Street ,Sethupattu ,Sethupattu Arani Road ,Ulagapattu Koodrot ,Dinakaran ,
× RELATED மின்னணு தேசிய வேளாண் சந்தை நடைமுறை...