×

திண்டுக்கல்- திருச்சி ரயில் பாதையில் எந்திரம் மூலம் கண்காணிப்பு பணி

 

வேடசந்தூர், ஜூன் 17: ரயில் தண்டவாளங்களை கண்காணித்து பராமரிக்க டிராக் மேன், கேங்க் மேன் உள்ளிட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் தொடர்ந்து தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? ரயில் செல்வதற்கு இடையூறு உள்ளதா? என்பதை கண்காணிப்பர். மேலும் வருடத்திற்கு ஒருமுறை எந்திரம் மூலம் தண்டவாளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் 3 ரயில்கள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் பலர் உயிரிழந்தனர். அதன்பின் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ரயில் பெட்டிகள் அடிக்கடி தடம் புரண்டன. இதை தொடர்ந்து ரயில் நிலையம் மற்றும் தண்டவாள பகுதியில் ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல்- திருச்சி ரயில் பாதையில் எந்திரம் மூலம் நேற்று கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தண்டவாளத்தில் விரிசல்கள், பலவீனமான பகுதிகள் கண்டறியப்பட்டு அவை மாற்றம் செய்யப்பட்டன. தண்டவாளத்தில் உள்ள தேவையற்ற பொருட்கள் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. பேக்கிங் மூலம் தண்டவாள பகுதியில் ஜல்லி கற்கள் நிரப்பப்பட்டன. திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரை அனைத்து ரயில் நிலை யங்களிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரயில்வே கேட் பகுதிகளிலும் தண்ட வாளங்கள் சோதனையிடப்பட்டது. ரயில்வே உயர் அதிகாரிகள் இந்த பணிகளை ஆய்வு செய்தனர்.

The post திண்டுக்கல்- திருச்சி ரயில் பாதையில் எந்திரம் மூலம் கண்காணிப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Dintukal-Trichy ,Vedasanthur ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு