×

கும்மிடிப்பூண்டியில் பைக்கை வழிமறித்து தம்பதியரை தாக்கிய 3 பேர் கைது

 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டி ஊராட்சி சேர்ந்தவர் முரளி(38). இவரது மனைவி நந்தினி(31). முரளி, கடந்த மாதம் 24ம் தேதி கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் நடந்த திருமண விழாவிற்கு, பைக்கில் தனது மனைவி நந்தினியுடன் சென்றார். பின்னர் திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் மனைவியுடன், முரளி பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சூரப்பூண்டி அருகே 3 வாலிபர்கள், முரளியின் வாகனத்தை வழிமடக்கி தகாத வார்த்தைகள் கூறியும் கைகளால் அடித்தும் துன்புறுத்தினர்.

இது குறித்து, பாதிரிவேடு காவல் நிலையத்தில், திருமண நிகழ்ச்சி சென்று வீடு திரும்பியபோது சூரப்பூண்டி அருகே தங்கள் வாகனத்தை வழிமறித்து, தங்களை தாக்கி, தகாத வார்த்தையில் திட்டிய வாலிபர்கள், மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நந்தினி புகார் மனு அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சாணபுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத்(27), ஸ்ரீகாந்த்(26), பென்னி(26) ஆகிய 3 பேரை கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கும்மிடிப்பூண்டியில் பைக்கை வழிமறித்து தம்பதியரை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Murali ,Surapoondi ,Nandini ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...