×

ஊத்துக்கோட்டையில் இருளர் மக்களின் வீட்டுமனை மனுக்கள் மீது துணை ஆட்சியர் நேரில் ஆய்வு

ஊத்துக்கோட்டை: ஊத்துகோட்டையில் இருளர் மக்களின் வீட்டுமனை மனுக்கள் மீது துணை ஆட்சியர் நேரில் ஆய்வுசெய்தார். ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில், கலைஞர் நகர், கொய்யாதோப்பு பகுதியில் வசிக்கும் 15க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் கோரிக்கை மனு வழங்கினர். இம்மனு மீது உரிய ஆய்வு நடத்தி, அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கலைஞர் நகரில் இருளர் இன மக்கள் வசிக்கும் கொய்யாத்தோப்பு பகுதிக்கு நேற்று மாலை துணை ஆட்சியர் சுபலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு, வீட்டுமனை பட்டா குறித்து ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில், இப்பகுதியில் கடந்த 1984ம் ஆண்டு கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீட்டில்தான் வசிக்கிறோம். அந்த வீடுகள் தற்போது பலத்த சேதமடைந்து உள்ளது. அவற்றை அகற்றிவிட்டு, புதிய தொகுப்பு வீடுகள் கட்டித் தரவேண்டும் என துணை ஆட்சியரிடம் இருளர் இன மக்கள் வலியுறுத்தினர்.

பின்னர் இப்பகுதியில் இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் புதிய தொகுப்பு வீடுகள் கட்டுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆட்சியர் சுபலட்சுமி உறுதியளித்தார். இந்த ஆய்வில் பேரூராட்சி துணை தலைவர் குமரவேல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அபிராமி, விஏஒ யுகேந்தர், கவுன்சிலர் கோகுல்கிருஷ்ணன், தொமுச நித்யாபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊத்துக்கோட்டையில் இருளர் மக்களின் வீட்டுமனை மனுக்கள் மீது துணை ஆட்சியர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ruler ,purulugarde ,Uthukkotta Thaluka ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...