×

ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் எச்யுஐடி விழிப்புணர்வு

சென்னை: தங்க நகைகளில் ஆறு இலக்க தனித்துவமான எச்யுஐடி ஹால்மார்க் தர முத்திரை கட்டாயம் என சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த பிறகு, தென் இந்தியாவின் முதன்மையான தங்க நகை விற்பனையங்களில் ஒன்றான ஜோஸ் ஆலுக்காஸ், எச்யுஐடி பிரச்சாரத்தின் இரண்டாவது கட்டத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப பிரசாரத்தின் ஒரு பகுதியாக, எச்யுஐடி ஹால்மார்க் விழிப்புணர்வு குறித்த தொலைக்காட்சி விளம்பரத்தை ஜோஸ் ஆலுக்காஸ் வெளியிட்டுள்ளது. அதன்மூலம், நாட்டிலேயே இத்தகைய விளம்பரத்தை வெளியிட்டுள்ள முதலாவது தங்க நகை விற்பனையகம் என்ற பெருமையை ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

எச்யுஐடி ஹால்மார்க் தர முத்திரை விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கு ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. எச்யுஐடி ஹால்மார்க் தர முத்திரை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஓர் இயக்கமாகவே ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக” நிறுவனத்தின் தலைவர் ஜோஸ் ஆலுக்கா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் எக்ஸ்சேஞ்ச் திருவிழா, வாடிக்கையாளர்களுக்கு அதிசயத்தக்க வகையில், பழைய தங்க நகைகளை எச்யுஐடி தர முத்திரை பதித்த புத்தம் புதிய தங்க நகைகளுக்கு மாற்றிக்கொள்ளும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

அத்துடன், பழைய தங்க நகைகளை மாற்றிக்கொள்ள இந்த எக்ஸ்சேஞ்ச் திருவிழா பலப்பல சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. எச்யுஐடி தர முத்திரையைப் பிரபலப்படுத்துவதற்காக மிகப்பெரிய அளவில் பல திட்டங்களை ஜோஸ் ஆலுக்காஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் “எச்யுஐடி தர முத்திரை உங்களுக்கு தைரியம் தரும்” என்ற முழக்கத்தை ஜோஸ் ஆலுக்காஸ் முன்னெடுத்துள்ளது.

The post ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் எச்யுஐடி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Jose Alukas ,CHENNAI ,HUIT ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...