×

ஏழ்மை நிலையில் உள்ள மாணவி ரேஷ்மாவுக்கு ரூ.1 லட்சம் கல்லூரி கட்டணம்: எடப்பாடி வழங்கினார்

சென்னை: ஏழ்மை நிலையில் உள்ள மாணவி ரேஷ்மாவுக்கு, கல்லூரி கட்டணம் ரூ.1 லட்சத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதுகுறித்து, அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழ்மை நிலையில் உள்ள சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த புருஷோத்தமன் மகள் ரேஷ்மா, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்துள்ள நிலையில் அவரது கல்லூரிக் கட்டணமாக, அதிமுக சார்பில் 1,08,000 ரூபாய்க்கான வரைவோலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வழங்கினார்.

அப்போது, மாணவி ரேஷ்மா சிறந்த முறையில் கல்வி பயில்வதற்கு வாழ்த்து தெரிவித்தார். தங்கள் குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையை அறிந்து கருணை உள்ளத்தோடு நிதியுதவி வழங்கிய, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியுதவி பெற்றுக் கொண்ட மாணவியும், அவரது தாயாரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஏழ்மை நிலையில் உள்ள மாணவி ரேஷ்மாவுக்கு ரூ.1 லட்சம் கல்லூரி கட்டணம்: எடப்பாடி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Reshma ,Chennai ,Edappadi Palaniswami ,AIADMK ,
× RELATED அன்னையர் தினம் எடப்பாடி வாழ்த்து