×

ஒற்றுமை நடை பயணத்தில் கேஜிஎப் பட பாடல்: ராகுல்காந்தி மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு

பெங்களூரு: கேஜிஎப் திரைப்பாடல் பயன்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு எதிராக விசாரணை நடத்த விதித்துள்ள தடையை ஒருவாரம் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தினார். அவர் கர்நாடகாவில் யாத்திரை மேற்கொண்டபோது கேஜிஎப்-2 கன்னட திரைப்பட பாடல் பயன்படுத்தப்பட்டது. அந்த பாடலை தனது அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் ராகுல்காந்தி உள்பட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக யஸ்வந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் தங்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகாரை ரத்து செய்யகோரி ராகுல்காந்தி, ஜெய்ராம்ரமேஷ் மற்றும் சுப்ரியா நாடி ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரணைக்கு ஏற்றுகொண்ட நீதிமன்றம் மனுதாரருக்கு எதிரான மனு மீது விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்திருந்தது. தடை நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை நேற்று நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்னிலையில் வந்தது. அப்போது, ராகுல்காந்தி உள்பட புகாரில் தொடர்புடையவர்கள் மீதான விசாரணையை மேலும் ஒரு வார காலம் விசாரிக்காமல் இருக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post ஒற்றுமை நடை பயணத்தில் கேஜிஎப் பட பாடல்: ராகுல்காந்தி மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : KGF ,Raqulkandi ,Bengaluru ,Rakulkandi ,
× RELATED சலார் 2வில் கியரா