×

வரதட்சணை வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பேட்டி

சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் கூடுதல் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கரை நேற்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு குஷ்பு நிருபர்களிடம் பேசியதாவது: தேசிய மகளிர் ஆணையம் சார்பில் தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் கிடப்பில் உள்ள வழக்குகள் குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேச டிஜிபி அலுவலகம் வந்தேன். கூடுதல் டிஜிபி சங்கரை சந்தித்து பேசினேன். எனக்கு அவர், இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் பதில் கொடுக்கிறோம் என்று தெரிவித்தார். கடந்த 2021ல் இருந்து தற்போது வரை 700க்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளது. தானாக முன்வந்து பதிவு செய்யப்பட்டதாக 26 வழக்குகள் உள்ளது. காவல்துறையில் புகார்கள் மீது முறையாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று எங்களிடம் பல புகார் வந்துள்ளது. குறிப்பாக வரதட்சணை கொடுமை வழக்குகள் தான் அதிகமாக உள்ளது. பெண்கள் அளிக்கும் வரதட்சணை மற்றும் பாலியல் தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post வரதட்சணை வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : National Women's Commission ,Kushbu ,Chennai ,DGB Sankar ,Tamil Nadu Police Director's Office ,National Women's ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் ஒட்டுமொத்த...