×

வனத்துறையில் 1,161 காலி பணியிடம் நிரப்புவது எப்போது? தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: வனத்துறையில் காலியாக உள்ள 1,161 காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று அரசுக்கு ஐகோர்ட் கேள்வி கேட்டுள்ளது. தமிழக வனத்துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 161 பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பணியாளர்கள் தேர்வுக்கு 10 கோடியே 81 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது எனவும் அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், வனத்தை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. காலியிடங்களை நிரப்பாமல் இயற்கை எப்படி பாதுகாக்கப்படும்.
ஆயிரத்து 161 பேரை தேர்வு செய்ய ரூ.10 கோடியே 81 லட்சம் என்றால் ஒருவர் தேர்வு செய்ய 93 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுகிறதா? தேர்வாணையம் உள்ளபோது அரசின் ஒப்புதல் எதற்கு. எனவே, இந்த காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 5க்கு தள்ளிவைத்தனர்.

The post வனத்துறையில் 1,161 காலி பணியிடம் நிரப்புவது எப்போது? தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Igourd ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...