×

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இன்று 16 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.10, 9.30, 9.40, 10.05, 10.20, 11, 11.20, 11.40, 11.59 மணிக்கும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இரவு 9.20, 9.50, 10.40, மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு 9.50, 10.45, 11.20, 11.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை- பல்லாவரம் இடையே இரவு 9.10, 9.20, 9.40, 10.05, 10.30, 11, 11.59 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 9.55, 10.10, 10.30, 10.50, 11.15, 11.45 மணிக்கும் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே இரவு 10.15, 10.45, 11.40 மணிக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இரவு 9.10, 11 மணிக்கு இயக்கப்படும் ரயில், திருமால்பூர் கடற்கரை இடையே இரவு 8 மணிக்கு இயக்கப்படும் ரயில், செங்கல்பட்டு- கடற்கரை இடையே இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இன்று ரத்து செய்யப்படுகிறது.

The post சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இன்று 16 மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai beach ,Chengalputtu ,Chennai ,beach ,tampam ,brinkalputtu ,Southern Railway ,Chennai Beach- ,
× RELATED சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே...