×

13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான சொத்துகள் போலீஸ் பாதுகாப்புடன் மீட்பு..!!

சிவகங்கை: 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான சொத்துகள் போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் ஆதீன மடத்தின் சொத்துகளை அறநிலையத்துறை மீட்டது. சிவகங்கை முக்குடி கிராமத்தில் உள்ள மடத்திற்கு சொந்தமான 1190 ஏக்கர் தரிசு நிலம் 2009ல் குத்தகைக்கு விடப்பட்டது. ஆதின மடத்துக்குச் சொந்தமான 3 இடங்களை புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் சண்முகம் ஆண்டுக்கு ஒரு லட்சம் என்ற அடிப்படையில் 29 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தார்.

அதன்படி, 1,190 ஏக்கர் நிலம், ஆதீன மடத்தின் மேல் தளம், மடத்தின் அருகே இருந்த இடம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. 3 இடங்களையும் குத்தகைக்கு பெற்றதில் இருந்து நிலத்திற்கான வாடகை, குத்தகை பணத்தை தொழிலதிபர் சண்முகம் வழங்கவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்புடன் 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டது.

The post 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான சொத்துகள் போலீஸ் பாதுகாப்புடன் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Adheena Mutt ,Sivagangai ,Madurai Adheena ,Mutt ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்